சாராயம் காய்ச்ச எரிசாராயம் - மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை.
தமிழக ஆந்திர எல்லைப்பகுதி.;
வாணியம்பாடி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராய ஊறல்களை மதுவிலக்கு போலீசார் அழித்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான மாத கடப்பா வெலதிகாமனி பென்டா தேவராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் பழனி உள்ளிட்ட 20 காவலர்கள் கொண்ட குழுவினர் மலைப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாதகடப்பா ,வெலதிகா மணி பென்டா , தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த 3000 லிட்டர் ஊறல்களை அழித்தனர்
மேலும் கள்ளச்சாராய காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட மாத கடப்பா பகுதியை சேர்ந்த பையோடன் , தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் உள்ளிட்ட இருவரை கைது செய்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்