முதல்வர் ஸ்டாலின் மார்ச் 26, 27ல் துபாய் பயணம்
முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக ஸ்டாலின் துபாய் செல்கிறார்.;
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதல்முறையாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் மார்ச் மாத இறுதியில் துபாயில் நடைபெறும் ஒரு கண்காட்சியில் கலந்து கொள்கிறார் என தகவல்கள் கடந்த மாதமே வெளியாகின. இந்த நிலையில் வரும் மார்ச் 26, 27 தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் இந்த மாத இறுதியில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அரங்கு அமைக்கப்படவுள்ளது. முதல்வராக ஸ்டாலின பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப்பயணம் இதுவாகும். இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.