காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

Update: 2021-03-07 05:45 GMT

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பது ஆகிய பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. இந்நிலையில் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் அழகிரி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.முன்னதாக நேற்று மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News