தமிழகத்தில் கொரோனா - இன்றைய நிலவரம்.
மொத்தம் 16,99,225 தொற்றாளிகள், 14,26,915 டிஸ்சார்ஜ் & 18,734 மரணங்கள்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,875 பேருக்கு (நேற்று 33,059) கொரோனா, 365 பேர் பலி (நேற்று 364) உயிரிழப்பு: 23,863 பேஷண்ட்ஸ் (நேற்று20486) டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் மேலும் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 16,99,225 (நேற்று16,31,291) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் மேலும் 34,875 பேருக்கு (நேற்று 33,059) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 16,31,291 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 23,863 (நேற்று 20,486) பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 14,26,915 நேற்று (13,81,690) பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் இன்று மேலும் 365 பேர் (நேற்று 364 )உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 18,௭௩௪ ( நேற்று 18,005 ) ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6297 பேர் (நேற்று 6016) 6150 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 1,62,401மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 16,99,225 தொற்றாளிகள், 14,26,915 டிஸ்சார்ஜ் & 18,734 மரணங்கள்