பிப்ரவரி 24 முதல் விருப்பமனு- அதிமுக அறிவிப்பு

Update: 2021-02-15 06:08 GMT

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பிப்ரவரி 24 ம் தேதி முதல் விருப்பமனுக்களை பெற்று கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமனுவுக்கு தமிழ்நாட்டில் 15 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் 5 ஆயிரம் ரூபாயும், கேரளாவில் 2 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News