விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ2000 – மத்திய அரசு செலுத்தியது

பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் ரூபாய் 2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது, இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update: 2020-12-27 09:00 GMT

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துகிறது.

இந்த பணம் இரண்டாயிரம், இரண்டாயிரம் ரூபாயாக  மூன்று தவணைகளாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தில் ரூபாய் 2000 விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News