நீங்கள் எங்கள் கஸ்டமர்-அதனால்தான் கஷ்டப்படுத்துகிறோம் -எஸ்.பி. ஐ வங்கி.
அவசியம் இருந்தா மட்டும் எஸ்.பி.ஐ வங்கிக்கு வாங்க.. இல்லண்ணா வராதீங்க..
எஸ்.பி.ஐ வங்கி 10 முதல் 1 மணி வரை மே 31 ம் தேதி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலையை வங்கியில் தான் முடிக்க முடியும் அப்படின்னு அவசியம் இருந்தா மட்டும் எங்க எஸ்.பி..ஐ வங்கிக்கு வாங்க.. இல்லண்ணா வராதீங்க.. அனைத்து விதமான சேவைகளுக்கும் எஸ்.பி.ஐ வழங்கும் போன் பேங்கிங் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுங்க.
இப்போதைக்கு எஸ்.பி. ஐ வங்கில 4 வேலை மட்டும் தான் நடக்குமாம்.. இன்னொரு முக்கியமான விஷயம் கண்டிப்பா மூஞ்சிய மூடிக்கிட்டு (முகக்கவசம் தான் வரணும் இல்லண்ணா கஸ்டமர் சத்தியமா நாட் அலவ்டு (உள்ளே அனுமதிக்கப்படமாட்டாங்களாம்).
கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் தொற்று அபாயம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்ம அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. ஆனால் எல்லாருக்கும் பணமும் வங்கி சேவைகளும் ரொம்ப இம்பார்ட்டெண்டா இருக்கிறது. இந்த சமயத்துல தானட அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சார்பில் தேவை இருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு வரவும் என்று கஸ்டமர்களிடம் கோரிக்கை வெச்சிருக்கா ய்ங்க.
அதுப்படி எஸ்.பி.ஐ வங்கி 10 முதல் 1 மணி வரை மே 31 ம் தேதி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி எஸ்.பி. ஐ வங்கி 10 மணி முதல் 2 மணி வரை இயங்குமாம். அதுலயும் முன்னாடி இருந்ததைப் போன்றே அனைத்து வங்கி சார் நிர்வாகப் பணிகளும் 50% ஊழியர்களைக் கொண்டு தான் இயங்குமாம்.
இப்போ எங்க வேலை இது மட்டும் தான் ...பணம் எடுத்தல் அல்லது வங்கிக் கணக்கில் செலுத்துதல், காசோலை தொடர்பான வேலைகள், வேலை தொடர்பான டி.டி./ நெஃப்ட்/ஆர்.ஜி.டி.எஸ் மற்றும் அரசு செலான் போன்றவற்றிற்காக மட்டுமே கஸ்டமர்கள் எங்க வங்கி சேவைகளை நேரில் பயன்படுத்த இயலும். மற்ற எல்லாத்துக்கும் எ(உ)ங்க எஸ்.பி.ஐ பேங்க் வழங்குற போன் பேங்கிங் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுங்க. அப்படின்னு அறிக்கை விட்டுருக்காய்ங்க...