கொரோனா தடுப்பு பணிகள் - நிதி வழங்கிய கலாநிதி.

சன் டிவி குழுமத் தலைவர்

Update: 2021-05-17 09:42 GMT

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ரூ.10 கோடி நிதி வழங்கினார்.கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கும் இந்த பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவை உள்ளது.

அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் சன் குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் சந்தித்து நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது துர்காஸ்டாலின் மற்றும் காவேரிகலாநிதி ஆகியோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News