கொரோனாவால் எந்த துறைக்கு பாதிப்பு அதிகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி தான்.
குடும்பத் தலைவர்களை இழந்து காத்துக் கொண்டிருக்கும் காவலர் குடும்பங்கள்.
நீதிபதிகளுக்கும், மருத்துவர்களுக்கும் ஒரு நியாயம் காவலர்களுக்கு ஒரு நியாயமா? என காவலர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
கொரோனா எனும் பெரும் தொற்று ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது, இதில் தப்பிப்பது என்பதே அரிதான செயலாக உள்ளது, அப்படிப்பட்ட சூழலில் இக்கொரோனாவை தடுக்க மருத்துவத்துறையும், காவல்துறையும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக படாத பாடுபட்டு வருகிறது.
இச்சூழ்நிலையில் செவிலியர் தினத்தன்று கொரோனா பாதிப்பினால் மரணமடைந்த மருத்துவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முதல்வராக பொறுப்பேற்ற திரு. ஸ்டாலின் அறிவித்தார், சில தினங்களுக்குப் பிறகு நீதிபதி ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தார் அதற்கும் முதல்வர் 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவிப்பு வெளியிட்டார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக முன்காலத்தில் கொரோனா ஒழிப்பில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு பணிபுரிந்து வரும் காவலர்களில் ஆயிரக்கணக்கானோர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
நூற்றுக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை தந்துள்ளார்கள் அவர்களின் குடும்பங்கள் தற்போது மிகப்பெரிய சோகத்திற்கும், தவிர்ப்பிற்க்கும், நிற்கதியாகி, அனாதையாக தவித்து வருகிறது, கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்க அந்நோய் மக்களிடம் பரவாமல் தடுக்க முழுஊரடங்கு, பாதிப்படைந்த பகுதிகளை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தங்களின் குடும்பம், உயிர் உள்ளிட்டவற்றை பெரிதாக பாராமல் இரவு பகலாக பணியாற்றி வந்தவர்களின் குடும்பங்கள் இன்று அனாதையாக்கப்பட்டிருப்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
முன்கள பணியாளர்களில் காவலர்களின் மரண எண்ணிக்கையை ஒப்பிடும் போது மற்றவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது.
அப்படி பார்த்தால் இந்த கொரோனாவால் எந்த துறைக்கு பாதிப்பு அதிகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, அப்படியிருக்கையில் மருத்துவர்களுக்கும் நீதிபதிக்கும் கிடைத்த நிவாரணம் காவல்துறையில் முன்காலத்தில் பணியாற்றி தங்கள் இன்னுயிரை நீர்த்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அரசின் முன் வைத்து அரசின் அறிவிப்பிற்காக தங்களின் குடும்பத் தலைவர்களை இழந்து காத்துக் கொண்டிருக்கும் காவலர் குடும்பங்கள்.