தடுப்பூசிகள் தமிழகத்தில் தயாரிப்போம் - முதலமைச்சர்.
நாமும் நல்லா இருக்கணும் - நாடும் நல்லா இருக்கணும்.;
ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களை தொடங்க தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதுமட்டுமன்றி மருத்துவம் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ஆக்சிஜன் செறியூட்டிகள்,தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும் தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மேற்காணும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அளிக்கும் என்றும் குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இவைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விருப்ப கருத்துகளை வரும் 31-ஆம் தேதிக்குள் கூறியுள்ளது.
அவ்வாறு பெறப்படும் விருப்ப கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆக்ஸிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உள்கட்டமைப்புகளை விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.