பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் - சிறிய முன்பதிவு மையங்கள் செயல்படாது.

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு.;

Update: 2021-05-14 16:57 GMT

பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் பயணச் சீட்டு முன்பதிவு மிகவும் குறைவான அளவில் சிறிய முன்பதிவு மையங்கள் செயல்படாது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமுலில் இருப்பதாலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் பயணச் சீட்டு முன்பதிவு மிகவும் குறைவான அளவில் இருக்கும் அம்பாத்துரை, மதுரை சந்திப்பு மேற்கு நுழைவாயில், ஆழ்வார் திருநகரி, கச்சினாவிளை, கல்லிடைக்குறிச்சி, குரும்பூர், கீழப்புலியூர், பாம்பன், பாளையங்கோட்டை, பேட்டை, ரவண சமுத்திரம் மற்றும் தாதன்குளம் ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு வசதி மே 16 முதல் மே 23 வரை செயல்படாது.இந்த ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு கொடுக்கும் கணிப்பொறியிலேயே பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி (Integrated Unreserved Ticketing System) ஏற்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News