மதுரை - புனலூர் சிறப்பு விரைவு ரயில் ரத்து.

பயணிகளின் போதிய ஆதரவின்மை.;

Update: 2021-05-14 13:43 GMT

ரயில் (மாதிரி படம்)

மதுரை - புனலூர் சிறப்பு விரைவு ரயில் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுகிறது 

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06729 மதுரை - புனலூர் சிறப்பு விரைவு ரயில் மே 15 முதல் மே 31 வரையும், வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு விரைவு ரயில் மே 16 முதல் ஜூன் 1 ம் தேதி வரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா, திருவனந்தபுரம் - மங்களூரு, எர்ணாகுளம் - காரைக்கால் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே மாத இறுதி இரு வாரங்களும் ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு மள்றும் விரைவு ரயில்கள் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News