தமிழ்நாடு அரசு சின்னம் மட்டும் கொண்ட பைகள் தயார் நிலையில்...
கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ள நிலையில்;
கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சின்னம் மட்டும் கொண்ட பைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்னர் வெளிட்டது.
தமிழகத்தில் அதிகரித்தும் வரும் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு மே 24 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கவில்லை
இந்நிலையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்து அதன் மூலம்.2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் ஆகியவை இதில் அடங்கும்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இந்த நிவாரணப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உணவுத்துறையும் கூட்டுறவுத்துறையும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சின்னம் மட்டும் கொண்ட பைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியின் படி வழங்க உள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.2000 இந்த மாதம் வழங்கப்படும் எனவும், அடுத்த மாதம் அடுத்த தவணையாக ரூ.2000 வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.