கூப்பிட்ட குரலுக்கு நின்று பதில் சொல்லும் அரசியல்வாதிகளில் ஒருவரான அப்பாவு.

கொஞ்சம் வாழ்க்கைக் குறிப்பு;

Update: 2021-05-11 11:12 GMT

கூப்பிட்ட குரலுக்கு நின்று பதில் சொல்லும் அரசியல்வாதிகளில் ஒருவரான அப்பாவு கொஞ்சம் வாழ்க்கைக் குறிப்பு

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு வெற்றி பெற்ற நிலையிலும் அது தொடர்பான சர்ச்சைகளும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு இன்னும் தீராத நிலையில் தற்போது நாலாவது தடவை அதே தொகுதியில் வெற்றி பெற்ற அப்பாவு இப்போது தி.மு.க அமைத்துள்ள 16-வது தமிழக அரசின் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டும் விட்டார் அது தெரிந்தது தான்.

69 வயசான அப்பாவு காங்கிரஸ் கட்சியில்தான் தன் அரசிலு் லைஃப்பை தொடங்கினார். அதன் பின்னாடி ஜி.கே. மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கின போது பலரைப் போல் அதுல போய் ஐக்கியமாகி சட்டசபைதேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகவும் தேர்வானார். அவரது முதல் தேர்தல் வெற்றி இதுதான் . அப்போது இருந்தே கமிசனுக்கு ஆசைப்படாமல் தன் பங்காக தனக்கு வரும் பணத்தையும் போட்டு மக்களுக்கு பல நலத் திட்டங்கள் செஞ்சு பலரையும் கவர்ந்தார்

அதை அடுத்து 2001ல் நடந்த தேர்தலில் அப்பாவு அதே தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் தமாகா - அதிமுக கூட்டணியில் இருந்த வேறு கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால் ஆவேசமான அப்பாவு சுயேச்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அந்த அளவுக்கு ராதாபுரத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக அவர் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார்.

விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தது என பல்வேறு மக்கள் பிரச்னைகளில் உண்மையான குரல் கொடுத்து வந்ததால் கிடைச்ச வெற்றியிது.

இதுபோன்ற சூழலில், தமாகா மீண்டும் காங்கிரஸில் இணைந்தபோதிலும், அப்பாவு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆனா தன்னோட தொகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள் சிலரை அப்பாவு தீவிரமாக எதிர்த்ததால், அந்தக் கட்சியின் தலைமையுடன் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வழக்குகள் பாய்ந்ததால், அப்செட் ஆன அப்பாவு, 2006 ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு அதே வருடம் நடந்த தேர்தலில் திமுக சார்பில் களம் கண்டு வெற்றியும் பெற்றார். வழக்கம் போல் தன் எல் எல் ஏ பணியினை தொடர்ந்து செவ்வனே செஞ்சு வந்தார்

இதை அடுத்து 2016 ஆம் வருடம் அப்பாவு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில் சிறிது அவசரப்பட்டு தபால்வாக்குகளை எண்ணியது போது என குரல் கொடுத்து தொடந்து இறுதியில் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.வாக்கு எண்ணும் மையத்தில் போரட்டத்திலும் ஈடுபட்டார் இதில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

அதில், ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. அதன்படி மறுவாக்கு எண்ணிக்கையும் நடந்தது. உடனே இதனை எதிர்த்து அப்போதைய ஆளுங்கட்சி இன்பதுரை சுப்ரீம் கோர்ட் போட்ட வழக்கால் இன்னிவரைமுடிவுகள் வெளியிடப்படாமலேயே இருக்குது.

இந்நிலையில்தான் நடந்து முடிந்த தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை சபாநாயகரா ஆக்கி வச்சிட்டார் முதல்வர் ஸ்டாலின்..

இது நெல்லை மண்ணுக்கு கிடைத்த பெருமை என்றும் சொல்லலாம்..

திரு. செல்லபாண்டியன்

திரு. சி .பா. ஆதித்தனார்

திரு. பி . எச். பாண்டியன்,

திரு. ஆவுடையப்பன்

என நெல்லைக்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் வரிசையில் மற்றுமொரு மணிமகுடம்

நெல்லை மண்ணின் மைந்தன் இராதாபுரம் எம்.எல்.ஏ திரு. அப்பாவு

அவர்களின் பணி சிறக்க இன்ஸ்டா செய்தி குழுமம் சார்பில் வாழ்த்துக்கள்!


Tags:    

Similar News