துபாயிலிருந்து வயிற்றுக்குள் மாத்திரைகளாக விழுங்கி கடத்தி வந்த ரூ.20 லட்சம் மதிப்புடைய 34 தங்கமாத்திரைகரை கேப்ஸ்சில்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,ராமநாதபுரத்தை சோ்ந்த பயணி கைது.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ரியாஸ்(39) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.சூட்கேஸ் மற்றும் பையில் மறைத்து வைத்திருந்த 12 ஐபோன்கள்,டிஜிட்டல் வாட்ச்கள்,பழைய லேப்டாப்களை கைப்பற்றினா்.
ஆனாலும் சந்தேகம் தீராமல் விமானநிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்துப்பாா்த்தனா்.அவருடைய வயிற்றுக்குள் தங்க மாத்திரை கேப்ஸ்சில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பயணி முகமது ரியாசை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா்.அங்கு அவருக்கு இனிமா கொடுத்து தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனா்.மொத்தம் 34 தங்க டியூப் மாத்திரைகளை வெளியே எடுத்தனா்.அதற்குள் 281 கிராம் தங்கம் இருந்ததை கைப்பற்றினா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.13 லட்சம்.ஏற்கனவே இவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புடைய ஐபோன்கள்,டிஜிட்டல் வாட்ச்கள்,பழைய லேப்டாப்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியிருந்தனா்.இதையடுத்து ரூ.20 லட்சம் மதிப்புடைய தங்கமாத்திரைகள்,மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்தனா்.அதோடுபயணி முகமது ரியாஸ்சை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.