தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு அதனை தீவிரமாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.