தமிழகத்தில் நேற்று மட்டும் ஆண்கள் 476 பேர், பெண்கள் 360 பேர் என தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 317 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, தமிழகம் முழுவதும் 8.58 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 98 சதவிதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலி மூலம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் என்று தலைமைச் செயலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.