பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம்

Update: 2021-03-13 05:00 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வலம் வந்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வலம் வந்தால் புதிய பறக்கும் படை மூலம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தடுப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்த இராதாகிருஷ்ணன் தேர்தல் பறக்கும் படை போல இந்த பறக்கும் படை செயல்படும் என்றார்.பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்ற இடங்களில் தனி நபர் இடைவெளியை பின்பற்றுமாறு பொதுமக்களை இராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News