தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Update: 2021-03-09 06:30 GMT

 தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு ,மார்ச் 13-ஆம் தேதி வரை தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக, தென் தமிழகத்தில் ஆங்கேங்கே லேசான மழை பெய்து வருகிறது.பேச்சிப்பாறை மற்றும் நாகர்கோவிலில் தலா 1 செ.மீ மழையும், மணிமுத்தாறு மற்றும் பாபநாசத்தில் தலா 2 செ.மீ மழையும்,பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

குமரிக்கடல் பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர பகுதிகளில் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Tags:    

Similar News