தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கூட்டணி, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி,பரப்புரை ஆகியவற்றில் முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்,தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம்,சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன்.நிலக்கோட்டை தனிதொகுதியில் தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.