வேட்பாளர்கள் குற்றப்பின்னணி- தேர்தல்ஆணையம் முக்கிய உத்தரவு

Update: 2021-03-03 05:50 GMT

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை நாளேடுகளில் விரிவாக விளம்பரப்படுத்துவதை உறுதி செய்யும்படி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் எழுதியிருக்கும் கடிதத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உரிய விளக்கங்களையும் உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும்.வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விபரங்களை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து அதனை சீலிடப்பட்ட உறையில் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டு்ம் என்றும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News