காவிரி ஆற்றின் உபரி நீரை தமிழகத்திற்கு வழங்க போவதில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான அடிக்கல்லை தமிழக அரசு அமைத்தது குறித்து மத்திய அரசிடம் கர்நாடக அரசு ஆட்சேபனை தெரிவிக்கும் என்று கூறிய எடியூரப்பா, மாநில நலனைக் காக்க வலுவான நடவடிக்கைகளை கர்நாடகா எடுக்கும் என்று கூறிய அவர், எந்த காரணத்திற்காகவும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் காவிரி உபரி நீரை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டார்.