புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தாக்கல்

Update: 2021-02-22 05:03 GMT

புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.

புதுச்சேரியில் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 9 ஆனது. தொடர்ந்து, திமுக எம்எல்ஏவான வெங்கடேசனும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.காங்கிரஸ் கூட்டணியில் வரிசையாக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே பெரும்பான்மையை நிருபிக்குமாறு புதுச்சேரி முதல்வருக்கு, துணைநிலை ஆளுனர் உத்தரவிட்டார். ஆகவே இன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். முன்னதாக, புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 7 பேரும், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும், நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் அவைக்கு வந்துவிட்டனர்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் அவைக்கு வருகை தந்தனர். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசினார் . புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்றும் அவர் கூறினார்.மேலும், கிரண்பேடியின் போட்டி அரசியல், மத்திய அரசின் கெடுபிடி ஆகியவற்றுக்கு மத்தியிலும் புதுச்சேரி அரசு 4 ஆண்டுகளாக சிறப்பாக மக்கள் பணியாற்றுவதாகக் கூறினார்.

Tags:    

Similar News