அதிமுகவில் புதிய பதவிக்கு இடமில்லை: வழக்கறிஞர்

அதிமுகவில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளில் இடமில்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-02-05 04:16 GMT

கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்

மேலும் அதிமுக-வில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளில் இடமில்லை என்ற வழக்கு இடைக்கால உத்தரவு நிலுவையில் உள்ளது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அமைச்சர்கள் இந்த வழக்கு குறித்து பேசாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவரது இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News