தலைமை தேர்தல்ஆணையர் விரைவில் தமிழகம் வருகை

Update: 2021-02-04 05:05 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்ரவரி 10 ம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரு துணை ஆணையர்கள் தமிழகம் வரவுள்ளனர். பிப்10, 11 இரு நாள்களில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் ஆணையர்கள், கட்சிப் பிரதிநிதிகளிடமும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். 

Tags:    

Similar News