மதுரை விமான நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து: முதல்வர் வழங்கினார்
மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.;
மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்து 4 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதாரத் துறை இணை இயக்குநர் Dr. அர்ஜூன் குமார் தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார் வட்டார மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை விமான நிலைய போலியோ சொட்டு மருந்து முகாமில் திரிஷிகா-வயது5, ஜெஸிகா - வயது 2 , சாகியா பானு -2 வயது, அக்ஸய லெஸ்மி -2 மாதம் ஆகிய 4 குழந்தைகளுக்கு முதல்வர் பழனிச்சாமி சொட்டு மருந்து வழங்கினார்.