தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளா் சண்முகம் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைசெயலாளராக உள்ள சண்முகம் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாா். அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பணி நீட்டிப்பு ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலாளராக ஓய்வு பெறவுள்ள சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.