பழனி முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தினார், இந்திய கிரிக்கெட் அணியின் யார்கர் கிங் சேலம் நடராஜன்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். துல்லியமாக பந்து வீசுவது நடராஜனுக்கு இயல்பாகவே உள்ள திறன். டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளதால் சிறப்பாக யார்க்கர் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுப்பவர். டிஎன்பிஎல் மற்றும் தமிழ்நாடு அணிக்காக அபாரமாக அவர் பந்து வீசியுள்ளார். 2017 சமயத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது,அதன் பிறகு 2018ல ஐதாராபாத் அணி ஏலம் எடுத்தது.
நடராஜனின் பெற்றோர்கள் இருவருமே தினக்கூலி தொழிலாளிகள். கிரிக்கெட் விளையாட்டில் கிடைத்த வருமானத்தின் மூலம் சொந்தமாக கான்க்ரீட் வீடு கட்டியுள்ளார். இந்த கிரிக்கெட் மூலமா அவர் குடும்பத்த செட்டில் பண்ணினதோடு, தனது கிராமத்தில் கிரிக்கெட் கனவோடு இருக்கின்ற இளைஞர்களுக்கு முறையான பயிற்சியும், வாழிகாட்டுதலும் கிடைக்கின்ற வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் அவர் கடந்த 2017இல் நிறுவியுள்ளார்.