விவசாயங்களை அழிக்கின்றனர்: கனிமொழி

மத்திய அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள விளை நிலங்களை ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி விவசாய நிலங்களை அழித்து வருவதாக திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2021-01-29 17:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போராட்டகள திடலில் நடைபெற்ற விடிவை நோக்கி ஸ்டாலின் குரல் மக்கள் கிராம சபை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செண்டை மேளங்கள் முழங்க திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மத்தியில் கனிமொழி பேசியதாவது :

மீத்தேன் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி தஞ்சை மாவட்ட விவசாய பணிகளை அழிக்க நினைக்கின்றனர். மத்திய அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள விளை நிலங்களை ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி விவசாய நிலங்களை அழித்து வருகின்றனர் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் நெற்களஞ்சியம் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் அழியும் உலகமே ஏர் பின்னால்தான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயத்தை அடகு வைக்கவே இந்த புதிய வேளாண் திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நியாயவிலை அங்காடிகளில் வசதி படைத்தவர்களுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றது. அது ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை, இந்த ஆட்சி பயனற்ற ஆட்சி, வீட்டில் பயனுற பொருளை எப்படி குப்பையில் வீசுகின்றோமோ அதேபோல் இந்த ஆட்சியை வீச வேண்டும். தற்போதைய அரசு பொள்ளாச்சி சம்பவத்தை மூடி மறைக்க காட்டும் அக்கறையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க காண்பிப்பதில்லை. ஏழை மாணவர்கள் படிப்பதற்காக கலைஞரால் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் தற்போது ஏழை மாணவர்கள் படிக்க இடம் இல்லாமல் மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்துள்ளது. இதற்கு தமிழக அரசாங்கம் உறுதுணையாக இருக்கின்றது என கனிமொழி பேசினார்.

Tags:    

Similar News