ஜெ.,பிறந்தநாள் இனி அரசு விழா: முதல்வர் அறிவிப்பு

Update: 2021-01-28 07:33 GMT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவிற்கு 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். பின்னர் உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, பல்வேறு சோதனைகளை வென்று அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா.

அவரது ஆட்சியில் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 32 ஆக இருந்த நிலையில், அவரது வழியில் செயல்படும் அரசின் நடவடிக்கையால் தற்போது 100க்கு 49-ஆக அதிகரித்துள்ளது.ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News