நெசவாளர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பேன்: ராகுல் காந்தி

இந்தியாவில் உள்ள விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பலப்படுத்தப்பட்டால், எல்லையில் சீனா வாலாட்ட நினைக்காது. -ராகுல் காந்தி;

Update: 2021-01-24 14:17 GMT

ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராகுல் காந்தி நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என ராகுல் காந்தி உறுதியளித்தார். நிகழ்ச்சியில், நெசவாளர்கள் சார்பில் ராகுல் காந்தி புகைப்படம் பொறித்த கைத்தறியால் நெய்யப்பட்ட போர்வை அவருக்கு பரிசாக வழங்கபட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுடன் அமர்ந்து ராகுல் காந்தி உணவருந்தி செல்பி எடுத்துக் கொண்டார். கூட்டத்தில், ராகுல் காந்தியின் மொழிபெயர்ப்பாளர் திடீரென மயக்கமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News