கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், சசிகலாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக உணவு எடுத்துக் கொள்கிறார். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.