விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு அழைப்பாணை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.;
துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது சர்ச்சையானது. நீதிபதிகள் பற்றிய குருமூர்த்தி பேச்சு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் துரைசாமி விண்ணப்பித்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி குறித்த விண்ணப்பத்தின் விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.