ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதேசமயம் விண்ணப்பக் கட்டணத்தை நாளைக்குள் செலுத்திக் கொள்ளலாம்.