பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா் பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார்.சசிகலாவை கேரளா அல்லது புதுச்சேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் கோரியுள்ளனர்.