கமலா ஹாரிஸ் பதவியேற்பு: மன்னார்குடியில் கொண்டாடினர்
கமலா ஹாரிஸ் சொந்த ஊரான மன்னார்குடி அருகே கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி ஏற்கிறார் கமலா ஹாரிஸ், அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள கிராமத்தில் மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அம்மாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் கமலா ஹாரிஸ் என்பது அனைவரையும் பெருமையடையச் செய்தது.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்பதை முன்னிட்டு, துளசேந்திரபுரம் கிராமமக்கள் அவரது தாய் பிறந்த கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா குல தெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனை தொடர்ந்து குழந்தைகள் கமலா ஹாரிசின் உருவம் படத்தை கையில் வைத்து கமலாஹாரிஸ் வாழ்க என கோஷமிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் .