விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் பெயர் நிறுத்தி வைப்பு

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அளிக்க இருந்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் பெயரை நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம்.;

Update: 2021-01-20 04:42 GMT

நடிகர் விஜய் சார்பில் ஒரு புகார் மனு, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் தனது பெயரில் எவரும் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது எனவும் அதன்மூலம் பிரபல நடிகரான தனது புகழுக்கு களங்கம் ஏற்படும் எனவும் இதை மீறி அனுமதி அளிக்கப்பட்டால் தாம் நீதிமன்ற படியேற இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் விஜய் எச்சரித்திருந்தார். இந்த புகாரை பரிசீலித்த மத்திய தேர்தல் ஆணையம், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அளிக்க இருந்த கட்சியின் பெயரை நிறுத்தி வைத்தது. மேலும் விஜய் என பெயரில்லாது மூன்று புதிய பெயர்களை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு S.A.சந்திரசேகருக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Similar News