தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நான்காவது நாளாக நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கு மேலும் 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் நாளை வரவுள்ளதாகக் கூறினார். மேலும் இதுவரையிலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவில்லை என தெரிவித்தார்.