திருமயம் தந்த திருமகள் சாந்தா

உலகில் எந்த நாட்டில் எந்த மூலையில் எந்தவொரு புற்றுநோய் ஆய்வு நடந்தாலும், சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை அறிந்துக்கொண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகப்படுத்துவதில் தனியாத ஆர்வம் உடையவர் மருத்துவர் சாந்தா.;

Update: 2021-01-19 06:48 GMT

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல்நலக்குறைவால் காலமானார்.. அவரது மறைவிற்கு தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் .

கொடு – பெறுவதற்காக அல்ல (To give and not to take ) என்பதை வாழ்க்கை தத்துவமாக கொண்டு லட்சியமாக வாழ்ந்தவர் சாந்தா அம்மையார்.


திருமயம் நகர்  இவரது குடும்பத்தின் பூர்வீகம். திருமயம் காசி விஸ்வநாதர் கோவில் இவர்களுக்கு சொந்தமானது. இவரது குடும்பத்தினர்  வேலையின் காரணமாக பூர்வீக நகரை விட்டு  சென்னைக்கு வந்தார். மருத்துவர் சாந்தா அம்மையார் 11 - 03 - 1927ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். சென்னை மருத்துவக்கல்லூரியில் 1949ம் ஆண்டு மருத்துவப்பட்டமும் 1955 -ல் முதுநிலை மருத்துவப்பட்டமும் பெற்றார்ர.

1949 ம் ஆண்டில் DR. முத்துலெட்சுமி ரெட்டி (இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - புதுக்கோட்டை நகரில் பிறந்தவர்). இத்திய மகளிர் சங்கத்தின் மூலமாக புற்றுநோய் மறுவாழ்வு நிதியம் ஒன்றை தொடங்கி புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமளையை உருவாக்கினார். சிறிய குடிலில் 12 படுக்கைகள் கொண்டு தொடங்கப்பட்ட மருத்துவ மையம்தான் இன்று 8 ஏக்கர் நிலப்பரப்பில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ( Adayar Cancer. Institute) பிரபலம் அடைந்துள்ளது.

சாந்தா அம்மையார் நினைத்திருந்தால் ஒரு தனியார் மருத்துவமனையை தொடங்கி பிரபலமடைய செய்து செல்வந்தராக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்திடாமல் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏழைகளுக்கு சேவை செய்திட அர்ப்பணித்தார். தனது மருத்துவமனை மருத்துவர்களிடம் அவர் விடுத்திடும் கோரிக்கை "நோயாளிகளை மனிதர்களாக கருதுங்கள் மனிதர்களாக நடத்துங்கள். பல சரக்கு பொருட்களாக அல்ல" என்பதுதான்.

உலகில் எந்த நாட்டில் எந்த மூலையில் எந்தவொரு புற்றுநோய் ஆய்வு நடந்தாலும் சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை அறிந்துக்கொண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகப்படுத்துவதில் தனியாத ஆர்வம் உடையவர்.

மகசேசே விருது, பத்மஸ்ரீ விருது, பத்மவிபூஷன் விருது, தமிழக அரசின் அவ்வையார் விருது என எத்தனையோ விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன. இன்னும் எத்தனை விருதுகள் அம்மையாரை வந்தடைந்தாலும் விருதால் அவருக்கு பெருமிதம் இல்லை. இந்த அம்மையாரால் விருதுகளுக்கு பெருமை என்றுதான் சொல்ல வேண்டும்.

கொடுக்கும் கரம் இறைவனுடையது. "கொடு – பெறுவதற்காக அல்ல" (To give and not to take ) என்பது அவரது வாழ்க்கை தத்துவம். பிறர் வாழ உன் உயிரையும் கொடு என்று பொருள்படும் படியாக தனது வாழ்க்கையை  புற்றுநோயாளிகள்  மறுவாழ்விற்காக அர்ப்பணித்தவர் மருத்துவர் சந்தா அம்மையார் .

Similar News