அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை வட்டத்தில் நடைபெறும் அஞ்சல் தேர்வில் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு, சு.வெங்கடேசன் எம்.பிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அஞ்சலக தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி மத்திய அரசுக்கு வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதத்தில் மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது.