தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெங்கடேசன் எம்பி.,வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,தமிழகத்தில் இந்த ஆண்டு ஏழு இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை வரவேற்று மகிழ்கிறேன். ஏழு இடங்களில் அகழாய்வு செய்வது மூன்று சிறப்புகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் அகழாய்வு மேற்கொள்வது இதுவே முதல் முறை.புதிய கற்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்றுக் காலம் என மூன்று பெரும் காலப்பகுதியையும் ஆய்வுக்களமாக கொண்டுள்ளது.தமிழக நிலப்பரப்பின் அனைத்து திசைகளிலும் ஆய்வுக்களம் அமைகிறது.இம்மூன்று தனிச்சிறப்பு கொண்ட அறிவிப்பாக இதனை நான் பார்க்கிறேன், வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.