அரசியலுக்கு வா தலைவா - வள்ளுவர் கோட்டத்தில் குவியும் ரசிகர்கள்
வா தலைவா வா என்ற கோசத்துடன் ரசிகர்கள் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.. தொடர்ந்து ரசிகர்கள் வந்து கொண்டுள்ளனர்.;
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி, தலைவர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் மாற்றம் விரும்பும் மக்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கவன ஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்று ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரும் தலைமைக்கு கட்டுப்பட்டு பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பல மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் இது தலைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள அறப்போராட்டம் ஆகும். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மக்களிடம் சென்று அரசியல் மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் வரை தொடருவோம் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.