சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குவியும் ரஜினி ரசிகர்கள்
வா தலைவா வா ... என தொடர்ந்து கோசம் எழுப்பி வருகின்றனர் .;
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.. உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி கூறியது.. ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.. தமிழகம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள் அடித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் பெருமளவு கூடி வருகின்றனர். அரசியலுக்கு வர வேண்டி "வா தலைவா வா " என்று தொடர்ந்து கோசம் எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் மிகப்பெரிய கூட்டம் கூடிவிடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
கூடத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என நிகழ்ச்சி அமைப்பாளர்களால் அறிவுறுத்தப் பட்டு மாஸ்க் அணிந்துள்ளனர், இல்லாதவர்களுக்கு மாஸ்க் இலவசமாக வழங்கப்படுகிறது. ரசிகர்கள் மொபைல் டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு இன்றி அமைதி வழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற வேண்டும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். திடிரென கூடிய கூட்டத்தால் பரபரப்பாக காணப்படுகிறது.