நூறு சதவீதம் ரசிகர்கள் அனுமதி நல்லதல்ல, உயர்நீதிமன்றம்

Update: 2021-01-08 10:14 GMT

தமிழகத்தில் பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர்,ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. எனவே திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததின் பேரில் திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதித்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. அதில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.தியேட்டர்கள் விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஜனவரி 11 ஆம் தேதி வரை தியேட்டர்கள் 50% ரசிகர்கள் அனுமதியுடன்தான் இயங்கவேண்டும் என்று கூறியிருக்கிறது.

Tags:    

Similar News