உள்துறைஅமைச்சர் அமித்ஷா சென்னை வருகை ரத்து

Update: 2021-01-07 05:17 GMT

ஜனவரி.14-ஆம் தேதி சென்னை வரவிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வரும் ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருவதாக இருந்தார். அதேபோல் சென்னை வருகையின்போது, அதிமுகவின் கூட்டணி குறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, சென்னையில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News