பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்வித்துறை முக்கிய உத்தரவு

Update: 2021-01-06 05:41 GMT

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.பள்ளிகூடங்களை திறப்பது குறித்து (ஜன.6 முதல் ஜன,8 வரை) கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி முடிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும்.காலை 9 மணி முதல் மாலை வரை நாள் ஒன்று 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட கருத்து தொகுப்பினை நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News