மூடப்பட்ட அறைகளில் கொரோனா அதிவேகமாக பரவும் : பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர்

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-01-05 04:46 GMT

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில், சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. சமீபத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார், இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு திரைப்பட துறையினர் மத்தியில் வரவேற்பும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என்றும், இதுபோன்ற இடங்களை மக்கள் தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

Similar News