பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி

அண்ணாத்த படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் தாமதமாகும் .;

Update: 2021-01-03 16:14 GMT

அரசியலில் இருந்து விலகிய ரஜினி தனது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல ஆயத்தமாகி விட்டார். தனக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்த அதே மருத்துவமனையில் சில நாட்களுக்கு உள் நோயாளியாக அட்மிட் ஆகி முழு உடல் பரிசோதனை செய்யவிருக்கிறார். அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தினரும் அவரை கவனித்துக் கொள்ள உடன் செல்கிறார்கள்.

இனி "அந்தப் பரிசோதனையை முடித்துக் கொண்டு திரும்பி வரும் ரஜினி என்றைக்கு "நான் ரெடி.. ஷூட்டிங் போலாம்.." என்று சிக்னல் கொடுக்கிறாரோ.. அன்றைக்குத்தான் 'அண்ணாத்த' படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங்…" என்று படத்தின் தயாரிப்பாளர்களான 'சன் பிக்சர்ஸ்' நிறுவனமே சம்பந்ததப் பட்டவர்களுக்குத் தெளிவுபடுத்தியது.

Similar News