டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.