தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

Update: 2021-01-02 05:15 GMT

தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை முதலாவதாக தொடங்கியது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் காலை 11மணி வரை தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. ஊசி எதுவும் போடாமல் கோவின் செயலி மூலம் சுகாதார பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News